அடகு கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற 4 பேர் கைது


அடகு கடையின் பூட்டை உடைத்து  திருட முயன்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 28 July 2021 1:10 AM IST (Updated: 28 July 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

அடகு கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாடிப்பட்டி,ஜூலை.
வாடிப்பட்டி அருகே கச்சைக்கட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 42). அந்தப் பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவர் இரவில் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
அதன் பின்னர் 4 பேர் இவரது கடையின் பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளனர். காலையில் கதவு பாதி திறந்து கிடப்பதை பார்த்த ராஜேந்திரன் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதே ஊரைச் சேர்ந்த யோகராஜ் (22) உள்ளிட்ட 4 பேர் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கேசவராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர்.

Next Story