அரசு விடுதி சமையலர் பலி


அரசு விடுதி சமையலர் பலி
x
தினத்தந்தி 28 July 2021 1:13 AM IST (Updated: 28 July 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி அரசு விடுதி சமையலர் பலியானார்.

வாடிப்பட்டி,ஜூலை
வாடிப்பட்டி அருகே கச்சைக்கட்டி பெரியார் நகரைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 42). வாடிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சமையலராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை மதுரைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வாடிப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். வடுகப்பட்டி அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக மதுரையிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வடிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா மகேஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான வடிவேலுக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

Next Story