6 பவுன் நகை அபேஸ்


6 பவுன் நகை அபேஸ்
x

சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறி மூதாட்டியிடம் 6 பவுன் நகை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை, ஜூலை.
மதுரை தெற்குவாசல் நாடார் வித்யா சாலை தெருவை சேர்ந்தவர் சைலாவதி (வயது 70). இவர் வில்லாபுரம் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது டிப் டாப் உடையணிந்த 2 பேர் அவரை தடுத்து நிறுத்தினார்கள். அவர்கள் தங்களை சி.பி.ஐ.அதிகாரிகள் என்று கூறினார். பின்னர் அவர்கள் மூதாட்டியிடம் இந்த பகுதியில் திருட்டு அதிகமாக நடக்கிறது. நீங்கள் இவ்வளவு நகையை அணிந்து செல்கறீர்களே என்று கூறினார்கள். பின்னர் அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையை வாங்கி காகிதத்தில் மடித்து கொடுத்து, அதனை வீட்டில் சென்று அணிந்து கொள்ளுங்கள் என்று கூறினர். சைலாவதியும் வீட்டிற்கு வந்து காகிதத்தை பிரித்து பார்த்தபோது அதில் நகை இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story