மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க. பெண் பிரமுகர் உள்பட 2 பேர் கைது + "||" + Two people were arrested including a female figure

அ.தி.மு.க. பெண் பிரமுகர் உள்பட 2 பேர் கைது

அ.தி.மு.க. பெண் பிரமுகர் உள்பட 2 பேர் கைது
விபசார வழக்கில் அ.தி.மு.க. பெண் பிரமுகர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை, ஜூலை.
மதுரை செல்லூர் தத்தனேரி கீழவைத்தியநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிளவர் சீலாவிற்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அந்த வீட்டை மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது அந்த வீட்டில் விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் அந்த வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த 2 பெண்களை பிடித்து விசாரித்தனர். அதில் ஒருவர் தனம் என்ற தனலட்சுமி (வயது 49) என்பதும், அவர் அ.தி.மு.க. முன்னாள் வட்ட செயலாளர் என்பதும் தெரிய வந்தது. இவர் பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்துள்ளார். பின்னர் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமியை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 25 வயது மதிக்கத்தக்க பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதேபோல் மதுரை ரெயில் நிலையம் அருகே விபசாரத்திற்கு ஆட்களை பிடிக்கும் வேலையில் ஒரு பெண் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரித்த போது ராணி (வயது 60) என்பதும், இவர் 3 பெண்களை விபசார தொழிலில் ஈடு்படுத்தி வருவதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணியை கைது செய்தனர். மேலும் 3 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.20 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்
பரமக்குடியில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
நெல்லையில் குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
கடையநல்லூரில் குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. காரில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
நெல்லையில் காரில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. கஞ்சா கடத்திய 2 பேர் கைது
திருக்குறுங்குடி அருகே கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.