மாவட்ட செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்கள் 3 பேருக்கு வலைவீச்சு + "||" + Network for 3 ration shop employees

ரேஷன் கடை ஊழியர்கள் 3 பேருக்கு வலைவீச்சு

ரேஷன் கடை ஊழியர்கள் 3 பேருக்கு வலைவீச்சு
ரேஷன் அரிசி, கோதுமை பதுக்கப்பட்டது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை,ஜூலை.
மதுரை ஐராவதநல்லூர் கல்லம்பல் ரோட்டில் உள்ள ஒரு குடோனில் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மண்டல உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த குடோனில் இருந்து 16 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி, 4½ டன் எடை கொண்ட கோதுமை மூடைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மேலஅனுப்பானடி பகுதியை சேர்ந்த முத்து (வயது 43) என்பவரை கைது செய்து விசாரித்தனர். இதில் அவர் உசிலம்பட்டி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து அரிசி மற்றும் கோதுமைகளை வாங்கியது தெரியவந்தது. உடனே போலீசார் உசிலம்பட்டி ரேஷன்கடை விற்பனையாளர்கள் மகாராஜன், மணி, பழனி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பேட்டையில் வீட்டில் சாராயம் காய்ச்ச முயன்ற 3 பேருக்கு வலைவீச்சு
வீட்டில் சாராயம் காய்ச்ச முயன்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.