பணம் எடுக்க உதவுவது போல் நடித்து பெண்ணின் வங்கிக் கணக்கில் ரூ.45 ஆயிரம் திருட்டு
பணம் எடுக்க உதவுவது போல் நடித்து பெண்ணின் வங்கிக் கணக்கில் ரூ.45 ஆயிரம் திருடப்பட்டது.
மேலூர்,ஜூலை.
மேலூர் அருகே டி.மாணிக்கம்பட்டியைச் சேர்ந்த அய்யம்மாள் என்ற பெண் மேலூர் செக்கடி பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க வந்தார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர் அவருக்கு உதவுவது போல் நடித்து ஏ.டி.எம். கார்டை மாற்றிக் கொடுத்து விட்டு தப்பிச் சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் அய்யம்மாளின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.45 ஆயிரம் எடுக்கப்பட்டது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண் மேலூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், மதுரையில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையம் மற்றும் நகைக் கடை ஒன்றில் அய்யம்மாளின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பரிவர்த்தனை நடைபெற்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியின் அடிப்படையில் போலீசார் அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
ஏ.டி.எம் மையங்களில் முன்பின் தெரியாத நபர்களிடம் ஏ.டி.எம். அட்டையை கொடுக்கக் கூடாது என்று மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன் மற்றும் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் அறிவுரை கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story