நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 29 July 2021 1:03 AM IST (Updated: 29 July 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

நகரின் பல்வேறு பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மதுரை, ஜூலை
மதுரை ஆனையூர், அரசரடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, நாளை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை வேங்கடாசலபதி நகர், யூனியன் வங்கி காலனி, பழைய விளாங்குடி, புது விளாங்குடி, காந்தி நகர், பாலமுருகன் கோவில், கணபதி நகர், ராமமூர்த்தி நகர், காமாட்சி நகர், எச்.எம்.எஸ். காலனி, ஸ்ரீராம் நகர், ஆனந்தா நகர், ஜானகி நகர், எம்.எம். நகர், இருளாண்டி தேவர் காலனி, கிருதுமால் நகர், டோக் நகர் பகுதி, கோ.ஆப்டெக்ஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார். 
சுப்பிரமணியுபுரம், அனுப்பானடி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சுப்பிரமணியபுரம் 1, 2, 3-வது தெரு, எம்.கே.புரம், நந்தவனம் பகுதிகள், டி.பி.கே.ரோடு, ரத்தினபுரம் பகுதிகள், சுந்தரராஜபுரம், சி.சி.ரோடு, காஜா தெரு, தெற்கு சண்முகாபுரம், சுப்பிரமணியபுரம் மார்க்கெட் பகுதிகள், வி.வி.கிரிசாலை, தாய் நகர், மாருதி நகர், கங்கா நகர், சோனையா நகர், சவுந்தரவிலாஸ் ரைஸ்மில் முதல் சன்ரைஸ் அப்பளம் சந்து உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என மின்வாரிய செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார். 
செல்லூர், தமுக்கம், சொக்கிகுளம், தாகூர் நகர் மின் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பாலம் ஸ்டேசன் ரோடு, ஹான்சாபுரம் மெயின்ரோடு, ஜம்புராபுரம், பள்ளிவாசல் தெரு, சர்ச் ரோடு, 50 அடி ரோடு, போஸ் வீதி, சரஸ்வதி தியேட்டர் ரோடு, குலமங்கலம் மெயின்ரோடு, பூந்தமல்லி நகர் மெயின்ரோடு, ஜீவா ரோடு, சிவகாமி தெரு, மீனாட்சிபுரம், சத்தியமூர்த்தி தெரு 1 முதல் 7 வரை, அகிம்சாபுரம் புது விலாசம், பிரசாத் ரோடு, இ.2,இ.2. ரோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி கூறியுள்ளார். 
மதுரை கோ.புதூர், கே.கே.நகர் மின் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இண்டஸ்ரியல் காலனி, சிட்கோ கேட் 1, 2, 3, 4, 5, அரசு பெண்கள் ஐ.டி.ஐ., ஐகோர்ட்டு பகுதிகள், சங்கர் நகர், ஆர்.டி.ஓ. அலுவலக பகுதிகள், கற்பக நகர் 1-16 தெருக்கள், முத்துராமலிங்கபுரம், மூன்று மாவடி கிழக்கு பகுதி, சம்பக்குளம் பகுதி, எஸ்.பி. ஆபிஸ், இ.பி. காலனி, விவேகானந்தர் தெற்கு பகுதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Next Story