திருநங்கையை கிண்டல் செய்ததால் கோஷ்டி மோதல் 4 பேர் கைது


திருநங்கையை கிண்டல் செய்ததால் கோஷ்டி மோதல் 4 பேர் கைது
x
தினத்தந்தி 29 July 2021 8:41 AM IST (Updated: 29 July 2021 8:41 AM IST)
t-max-icont-min-icon

திருநங்கையை கிண்டல் செய்ததால் கோஷ்டி மோதல் 4 பேர் கைது.

திரு.வி.க. நகர்,

சென்னை புரசைவாக்கம், எஸ்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 25). இவர், அதே பகுதியை சேர்ந்த ஒரு திருநங்கையை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சூரிய பிரசாத் (23) என்பவர், வினோத்துடன் சென்ற திருநங்கையை பார்த்து கேலி கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். இது குறித்த புகாரின் பேரில் தலைமைச் செயலக காலனி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கோஷ்டி மோதலில் ஈடுபட்டவர்களை தடுத்து, அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

பின்னர் இது தொடர்பாக சூரிய பிரசாத், முகிலன் (21), செல்லப்பா (21) ஆகஸ்ட் (19) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.

Next Story