2-ம் கட்ட பாதையில் ஓட்ட 70 ரெயில்கள் வாங்க ஒப்புந்தப்புள்ளி மெட்ரோ ரெயில் நிறுவனம் நடவடிக்கை


2-ம் கட்ட பாதையில் ஓட்ட 70 ரெயில்கள் வாங்க ஒப்புந்தப்புள்ளி மெட்ரோ ரெயில் நிறுவனம் நடவடிக்கை
x
தினத்தந்தி 29 July 2021 8:47 AM IST (Updated: 29 July 2021 8:47 AM IST)
t-max-icont-min-icon

2-ம் கட்ட பாதையில் ஓட்ட 70 ரெயில்கள் வாங்க ஒப்புந்தப்புள்ளி மெட்ரோ ரெயில் நிறுவனம் நடவடிக்கை.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் 2-ம் கட்டமாக 118 கிலோ மீட்டர் தூரம் ரெயில்களை இயக்க ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளனர். இந்த பாதையில் இயக்குவதற்காக 70 ரெயில்கள் வாங்க சர்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

ஜப்பான் நிதி நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரெயில்களுக்கு தேவையான உதிரிபாகங்கள், சிக்னல்கள் போன்றவற்றை ஜப்பான் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யப்பட வேண்டும். அதன் மூலம் 75 சதவீதம் ரெயில்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும்.

இந்திய நிறுவனங்களில் அல்லது இந்தியாவில் உள்ள ஜப்பான் நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட வேண்டும். 25 சதவீதம் ரெயில்கள் இறக்குமதி செய்து கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக அதிகபட்சமாக 70 ரெயில்கள் வாங்கப்படுகிறது. இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story