பூசாரி வீட்டில் இருந்து சாமி சிலை மீட்பு
பூசாரி வீட்டில் இருந்து சாமி சிலை மீட்கப்பட்டது.
சிவகாசி, ஜூலை
சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் செங்மால் ஊருணி உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு தூர்வாரும் பணி நடைபெற்று. அப்போது சுமார் 1½ அடி உயரமும், அரை அடி அகலமும், 9 கிலோ எடையும் கொண்ட பழமையான அர்த்தநாரீஸ்வரர் வெண்கல சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலையை அந்த பகுதியை சேர்ந்த பூசாரி மணிகண்டன் தனது வீட்டில் வைத்து பூஜை செய்து வந்தார். இது குறித்து மதுரை மண்டல சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இன்ஸ்பெக்டர்கள் சத்யபிரபா, இளங்கோ ஆகியோர் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று காலை பூசாரி மணிகண்டன் வீட்டிற்கு வந்து சிலை குறித்து விசாரித்தனர். பின்னர் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த அர்த்தநாரீஸ்வரர் சிைலயை மீட்டனர். பின்னர் அந்த சிலையை சிவகாசி தாசில்தார் ராஜ்குமாரிடம் ஒப்படைக்க போலீசார் தாலுகா அலுவலகம் வந்தனர். சிலையை பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் தொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மத்தியில் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
Related Tags :
Next Story