இளம் பெண் தற்கொலை


இளம் பெண் தற்கொலை
x
தினத்தந்தி 30 July 2021 1:27 AM IST (Updated: 30 July 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

இளம் பெண் தற்கொலை செய்துகொண்டார்.

மதுரை, 
மதுரை செல்லூர் அருள்தாஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (வயது 23). இவருக்கும் திருப்புவனத்தை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கும் இடையே 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆதிலட்சுமி கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு வந்து விட்டார். அங்கு மனவருத்தத்தில் இருந்த அவர் திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் ஆதிலட்சுமி இறப்பு தொடர்பாக ஆர்.டி.ஓ. விசார ணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Next Story