நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 30 July 2021 1:40 AM IST (Updated: 30 July 2021 1:40 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அரசரடி, எல்லீஸ் நகர், அனுப்பானடி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மதுரை, 
மதுரை அரசரடி, எல்லீஸ் நகர், அனுப்பானடி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணி

மதுரை அரசரடி, எல்லீஸ் நகர் துணைமின்நிலைய பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை காளவாசல் பைபாஸ், குரு தியேட்டர், பாஸ்டின்நகர், சின்னசாமி பிள்ளை தெரு, செங்கோல் நகர், மேட்டு தெரு, ஐ.என்.டி.யூ.சி. காலனி, நாகுநகர், அண்ணா மெயின்வீதி, பெத்தானியாபுரம், கொன்னவாயன் சாலை, தீக்கதிர், களத்துபொட்டல், இந்திராநகர், பாத்திமா நகர், ஹார்வி நகர், இ.பி.காலனி, இந்திராணி நகர், எல்லீஸ்நகர் எம் மற்றும் எச் பிளாக்,போடி லைன், எல்லீஸ் நகர் கலைஞர் பூங்கா, மெயின்ரோடு, தாமஸ்காலனி, தாகூர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. 
இதேபோல மாட்டுத்தாவணி துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 10 மணிமுதல் மதியம் 1 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சம்பகுளம், 120 அடி ரோடு, கணேஷ்நகர், வைரம் அப்பார்ட்மெண்ட், விவேகானந்தர் நகர், மகாத்மா பள்ளி பகுதிகள், சர்வேயர் காலனி, கொடிக்குளம் மெயின்ரோடு, மாட்டுத்தாவணி பூ மார்க்கெட், நெல் மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அண்ணாநகர் மின்பிரிவில் நாளை காலை 10 மணிமுதல் மதியம் 1 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அண்ணாநகர் கிழக்கு, குருவிக்காரன் சாலை, எஸ்.எம்.பி. காலனி, காமராஜர் தெரு, ஆலமரம் பஸ் நிறுத்ம், ஜக்கா தோப்பு, அரவிந்த் மருத்துவமனை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் பிரகாஷ்பாபு, மலர்விழி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அனுப்பானடி

மதுரை சுப்பிரமணியபுரம், அனுப்பானடி ஆகிய துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பெரியார் பஸ் நிலையம், டி.பி.கே. ரோடு, திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு, மேல மாசி வீதி ஒரு பகுதி, இன்மையில் நன்மை தருவார் கோவில் தெரு, மேலவடம் போக்கி தெரு, ஹயாத்கான் சாலை, மேலவாசல் ஹவுசிங் போர்டு, மேலவாசல் மரக்கடை பகுதிகள், ஹீரா நகர், திடீர் நகர், மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரியம், கிறிஸ்டியன் தெரு, சூசை மைக்கேல் தெரு, தெய்வக்கன்னி தெரு, அய்யனார் கோவில் மார்க்கெட், மண்எண்ணெய் பல்க் ஏரியா மற்றும் மேல அனுப்பானடி மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார். 

Next Story