மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி முகாம் + "||" + Corona vaccination camp

கொரோனா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி முகாம்
செம்பட்டி அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே போடிக்காமன்வாடி ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில், போடிக்காமன்வாடி, சொக்கலிங்கபுரம், வீரசிக்கம்பட்டி உள்ளிட்ட கிராம பொதுமக்களுக்கு தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.

 இந்த முகாமை ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி சசிக்குமார் தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் விஜய்பழனி முன்னிலை வகித்தார்.
முகாமில், சித்தையன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் டாக்டர் ஏஞ்சலின் ஜென்சி, சவுந்தர்யா, சுகாதார ஆய்வாளர்கள் ரெங்கசாமி, சந்திரமோகன் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள், ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


முகாமில் போடிக்காமன்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட போடிக்காமன்வாடி, சொக்கலிங்கபுரம், வீரசிக்கம்பட்டி உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 200 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. 1,150 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்
விழுப்புரம் மாவட்டத்தில் 1,150 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
2. கொரோனா பரிசோதனை முகாம்
வெம்பக்கோட்டை அருகே கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
3. கொரோனா தடுப்பூசி முகாம்
கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
4. ரத்த தான முகாம்
ரத்த தான முகாம்
5. சிறப்பு மருத்துவ முகாம்
சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.