மாவட்ட செய்திகள்

புனே மற்றும் ஐதராபாத்தில் இருந்து 4 லட்சத்து 70 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன + "||" + 4 lakh 70 thousand vaccines came to Chennai from Pune and Hyderabad

புனே மற்றும் ஐதராபாத்தில் இருந்து 4 லட்சத்து 70 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன

புனே மற்றும் ஐதராபாத்தில் இருந்து 4 லட்சத்து 70 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 2 கோடியே 15 லட்சத்து 33 ஆயிரத்து 790 தடுப்பூசிகள் வந்து உள்ளன.
இதுவரை தமிழகத்தில் சுமார் 2 கோடியே 6 லட்சத்து 96 ஆயிரத்து 109 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.இந்தநிலையில் புனேவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக 23 பெட்டிகளில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 350 ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் வந்தன.

அதேபோல் ஐதராபாத்தில் இருந்து 17 பெட்டிகளில் 2 லட்சம் ‘கோவேக்சின்’ தடுப்பூசிகள் வந்தன. ஒரே நாளில் சென்னை வந்த 4 லட்சத்து 70 ஆயிரத்து 350 தடுப்பூசிகள் தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; புதிதாக 62 பேருக்கு தொற்று உறுதி
சீனாவில் கடந்த ஓரிரு மாதங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2. ஆந்திராவில் இன்று 1,296 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
ஆந்திராவில் தற்போது 14,797 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. கேரளாவில் இன்று 23,260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் தற்போது 1,88,926 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. மிசோரம் மாநிலத்தில் மேலும் 1,121 - பேருக்கு கொரோனா
மிசோரம் மாநிலத்தில் மேலும் 1,121 - பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ஆந்திராவில் இன்று 1,248 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
ஆந்திராவில் தற்போது 14,708 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.