மாவட்ட செய்திகள்

சென்னை புறநகர் பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை தாம்பரம் மார்க்கெட் வருகிற 9-ந் தேதி வரை மூடல் + "||" + Tambaram market to be closed till 9th to curb the spread of corona in the suburbs of Chennai

சென்னை புறநகர் பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை தாம்பரம் மார்க்கெட் வருகிற 9-ந் தேதி வரை மூடல்

சென்னை புறநகர் பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை தாம்பரம் மார்க்கெட் வருகிற 9-ந் தேதி வரை மூடல்
சென்னை புறநகர் பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதியான தாம்பரம் மார்க்கெட் வருகிற 9-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்,

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று தணிந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது. இதனால் வார விடுமுறை நாட்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சென்னை புறநகரில் ஒட்டியுள்ள பகுதிகளில் கொரோனா தொற்று பரவ அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மார்க்கெட் மூடல்

அதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதியான தாம்பரம் மார்க்கெட் பகுதி முன்னெச்சரிக்கையாக வருகிற 9-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான தாம்பரம் சண்முகம் சாலை, அப்துல் ரசாக் சாலை, புது மார்க்கெட் பகுதி, காய்கறி கடைகள், மீன் கடைகள், இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மார்க்கெட் நுழைவுபகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தவே தாம்பரம் மார்க்கெட் பகுதி மூட உத்தரவிட்டுள்ளதாகவும், நோய் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள், வியாபாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 35 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1700-ஐ தாண்டியது
தமிழகத்தில் 35 நாட்களுக்கு பிறகு நேற்று கொரோனா பாதிப்பு மீண்டும் 1,700-ஐ தாண்டியது.
2. 5 வார்டுகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி
மதுரை மாநகராட்சியில் 5 வார்டுகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி இலக்கு எட்டப்பட்டுள்ளது
3. 33 பேருக்கு கொரோனா பாதிப்பு
மதுரையில் நேற்று 33 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது
4. நாகர்கோவில் மருத்துவ கல்லூரியில் 4 மாணவர்களுக்கு கொரோனா
நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. எந்த நாடும் செய்ய முடியாததை இந்தியா செய்திருப்பது மகிழ்ச்சி; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு பாராட்டு
கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.