ஊரப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருட்டு


ஊரப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 1 Aug 2021 10:24 PM IST (Updated: 1 Aug 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

ஊரப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருடப்பட்டது.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் சொக்காத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 33), இவர் வீட்டை பூட்டி கொண்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்த நிலையில் இவரது வீட்டின் அருகே உள்ள அக்கம்பக்கத்தினர் போன் செய்து உங்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர்.

உடனே கார்த்திக் சென்னையில் இருந்து வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நகை திருட்டு

உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 12 பவுன் நகை மற்றும் 900 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து கார்த்திக் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருட்களை திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Next Story