கடன் வாங்கி தருவதாக தொடர்ந்து மோசடி: முக்கிய குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது


கடன் வாங்கி தருவதாக தொடர்ந்து மோசடி: முக்கிய குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 2 Aug 2021 3:20 PM IST (Updated: 2 Aug 2021 3:20 PM IST)
t-max-icont-min-icon

கடன் வாங்கி தருவதாக தொடர்ந்து மோசடி: முக்கிய குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது.

சென்னை,

சென்னையில் கடன் வாங்கி தருவதாக பல்வேறு நபர்களிடம் தொடர்ந்து கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டு வந்த முக்கிய குற்றவாளியான விநாயகா ஆச்சாரி என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, உதவி கமிஷனர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பாரதி ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு சிபாரிசு செய்தனர். அதை ஏற்று விநாயகா ஆச்சாரியை ஒரு ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story