ஓய்வுபெற்ற அதிகாரியின் வங்கி கணக்கில் ரூ.28 ஆயிரம் நூதன மோசடி


ஓய்வுபெற்ற அதிகாரியின் வங்கி கணக்கில் ரூ.28 ஆயிரம் நூதன மோசடி
x
தினத்தந்தி 3 Aug 2021 10:37 AM IST (Updated: 3 Aug 2021 10:37 AM IST)
t-max-icont-min-icon

சென்னை வடபழனி, குமரன் காலனியை சேர்ந்தவர் பரதன். இவர், தடயவியல் துறை அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர், தான் தொலை தொடர்பு சேவை மையத்தில் இருந்து பேசுவதாகவும், தங்களது வாடிக்கையாளர் பற்றிய விவரம் இதுவரை சமர்ப்பிக்கப்படாமல் உள்ளதால், உங்கள் இணைப்பு துண்டிக்கப்பட உள்ளதாக கூறினார்.

அதை உண்மை என்று நம்பிய பரதன், அந்த மர்மநபர் தனது செல்போனுக்கு அனுப்பிய ‘லிங்க்’கை பயன்படுத்தி அவர் கூறியபடி அதில் ரூ.10 சேவை கட்டணம் செலுத்தினார். சிறிது நேரத்தில் பரதனின் வங்கி கணக்கில் இருந்து இரண்டு தவணைகளாக ரூ.28 ஆயிரம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பரதன், இந்த நூதன மோசடி குறித்து வடபழனி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story