அடுத்தவரின் வீடுகளை குத்தகைக்கு விட்டு ரூ.78 லட்சம் சுருட்டல் மோசடி நபர் கைது


அடுத்தவரின் வீடுகளை குத்தகைக்கு விட்டு ரூ.78 லட்சம் சுருட்டல் மோசடி நபர் கைது
x
தினத்தந்தி 3 Aug 2021 4:27 PM IST (Updated: 3 Aug 2021 4:27 PM IST)
t-max-icont-min-icon

அடுத்தவரின் வீடுகளை குத்தகைக்கு விட்டு ரூ.78 லட்சம் சுருட்டல் மோசடி நபர் கைது.

சென்னை,

சென்னை மந்தைவெளி வேலாயுதம் தெருவில் சிங்கி பிரதர்ஸ் என்ற குடும்பத்துக்கு சொந்தமான 10 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை தனது வீடுகள் என்று ஏமாற்றி உமாபதி என்பவர் 8 பேரிடம் குத்தகைக்கு விட்டு ரூ.78 லட்சத்தை சுருட்டி விட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் வெங்கடேசன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். புகார் கூறப்பட்ட உமாபதி நேற்று கைது செய்யப்பட்டார்.

Next Story