கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு பொது மக்களின் அலட்சியமே காரணம் டாக்டர் ராமதாஸ் அறிக்கை
முக கவசம் அணிய வேண்டும்: கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு பொது மக்களின் அலட்சியமே காரணம் டாக்டர் ராமதாஸ் அறிக்கை.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பொது மக்களாகிய நம்மில் பெரும்பான்மையினர் காட்டிய அலட்சியமும், அத்துமீறல்களும் தான் காரணம்.
மீன் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள் என பல இடங்களில் மக்கள் கூடியதன் விளைவாகவே கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் செய்திருக்கும் எச்சரிக்கை உண்மையானதுதான். பொதுமக்கள் விழிப்புடனும், கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றியும் நடக்காவிட்டால் தமிழ்நாட்டில் மூன்றாவது அலையை தடுக்க முடியாது.
கொரோனா மூன்றாவது அலையைத் தடுப்பது அரசின் கைகளிலும், பொதுமக்களின் கைகளிலும்தான் உள்ளது. எனவே, பொதுமக்கள் இனியாவது தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் ஓர் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதை நாம் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story