விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் விற்பனை மந்தம்: களிமண் பொம்மைத் தொழிலாளர்கள் நிவாரணம் வழங்க கோரிக்கை
விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் விற்பனை மந்தம்: களிமண் பொம்மைத் தொழிலாளர்கள் நிவாரணம் வழங்க கோரிக்கை.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தில் களிமண், காகிதகூழை பயன்படுத்தி விநாயகர் சிலை செய்பவர்களின் வாழ்வாதாரம் கடந்த 2 ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சீபுரம் களிமண், காகிதக்கூழ் பொம்மைத் தொழிலாளர்கள் குலாலர் நல சங்கத் தலைவர் கணேசன் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
காஞ்சீபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு, களிமண், காகிதகூழை பயன்படுத்தி பல்வேறு வடிவமைப்புகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனையாவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை விதித்து அரசு உத்தரவிட்டது.
இதனால் காஞ்சீபுரம் தொழிலாளர்கள் மூலம் செய்த ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் வீணாகிவிட்டன. இந்த ஆண்டும் விழாவுக்கு தடை விதிக்கப்படுமோ என்ற தயக்கத்தில் தயார் செய்யப்பட்டுள்ள சிலைகள் விற்பனையாகாமல் கிடக்கிறது என்றார்.
மேலும், இந்த ஆண்டும் இதற்கான தடை நீடித்தால், எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என வேதனையுடன் தெரிவித்த தொழிலாளர்கள் தங்களுக்கு உரிய நிவாரணத்தையும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story