கொரோனா தொற்று விழிப்புணர்வு பேரணி
செங்கல்பட்டு நகராட்சி சார்பில் கொரோனா தொற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
செங்கல்பட்டு,
நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு நகராட்சி சார்பில் கொரோனா தொற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி தலைமையில் கொரோனா தொற்று ஒழிப்பு உறுதிமொழி ஏற்று பேரணியானது தொடங்கப்பட்டது. இந்த பேரணி செங்கல்பட்டு பழைய பஸ்நிலையத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி மணிகூண்டு, ராஜாஜி சாலை வழியாக புதிய பஸ்நிலையத்தில் நிறைவு பெற்றது. இந்த கொரோனா ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் கொரோனா தொற்றுக்கு எதிரான பதாதைகள் ஏந்தியபடி 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story