காஞ்சீபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள்


காஞ்சீபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள்
x
தினத்தந்தி 8 Aug 2021 5:41 AM GMT (Updated: 8 Aug 2021 5:41 AM GMT)

காஞ்சீபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2021-22-ம் ஆண்டு குறுகிய கால பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.

காஞ்சீபுரம், 

விழாவுக்கு அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய துணை பதிவாளரும் முதல்வருமான உமாபதி வரவேற்றார். காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளரும் மேலாண்மை இயக்குனருமான லோகநாதன் முன்னிலை வகித்தார். காஞ்சீபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் லட்சுமி தலைமை தாங்கி பேசினார். விழாவில் துணைப்பதிவாளர் பொது வினியோக திட்டம் கி.மணி, பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கி துணைப்பதிவாளரும் மேலாண்மை இயக்குனருமான ஆர்.கந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் விரிவுரையாளர் கோகிலா நன்றி கூறினார்.

Next Story