திடீர் தீ விபத்து
ரப்பர் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
மேலூர்,ஆக.
மேலூர் அருகே அரிட்டாபட்டி பகுதியில் உள்ள தனியார் ரப்பர் தொழிற்சாலையில் 300-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு ஊதிய உயர்வு கேட்டு கடந்த 2-ந்தேதி முதல் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திடீரென தொழிற்சாலை வளாகத்திற்குள் இருந்த கழிவுகளில் தீப்பிடித்தது.
தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகர், ஆர்.டி.ஓ. பிர்தவுஸ் பாத்திமா உள்ளிட்டோர் வந்து விசாரணை நடத்தினர். இதனிடையே தங்களது போராட்டத்தை திசை திருப்பும் வகையில் தொழிற்சாலை நிர்வாகம் தீ விபத்து ஏற்படுத்திவிட்டதாக தொழிலாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. வெளிநபர்கள் சிலர் அத்துமீறி நுழைந்து தொழிலாளர்களை விரட்டிவிட்டு தீ விபத்து ஏற்படுத்திவிட்டதாக தொழிற்சாலையின் நிர்வாக மேலாளர் குற்றம் சாட்டினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தொழிற்சாலை பகுதியில் மேலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story