குடிநீர் குழாய்களை திருடிய வாலிபர்


குடிநீர் குழாய்களை திருடிய வாலிபர்
x
தினத்தந்தி 11 Aug 2021 1:29 AM IST (Updated: 11 Aug 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் குழாய்களை திருடிய வாலிபர் சிக்கினார்

திருப்பரங்குன்றம்,ஆக
திருப்பரங்குன்றம் யூனியன் நிலையூர் கைத்தறி நகரில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தெருக்கள் முழுவதுமாக குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. மேலும் வீடுகள் தோறும் குடிநீர் வினியோகத்துக்காக தனித் தனியாக புதிய குழாய்கள் பொருத்தும் பணியும் நடந்து வருகிறது. இதையொட்டி வீடுகள் மற்றும் தெரு ஓரங்களில் குழாய் உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை கடந்த சில நாட்களாக திருடு போயின. மேலும் வீடுகளுக்கு முன்பாக பொருத்தப்பட்ட குழாய்களையும் அறுத்து எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் மதுரை முத்துப்பட்டியைச் சேர்ந்த அழகர்சாமி (வயது 37) என்பவர் தெருக் குழாய்களை அறுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரை பிடித்து ஆஸ்டின்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story