கார் மோதி கூலி தொழிலாளி பலி


கார் மோதி கூலி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 11 Aug 2021 1:44 AM IST (Updated: 11 Aug 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

கார் மோதி கூலி தொழிலாளி பலியானார்.

திருமங்கலம்,ஆக.
திருமங்கலம் அருகே உள்ள கிழவனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு (வயது 60). கூலி தொழிலாளி. இவர் நேற்று மதியம் வேப்ப முத்துக்களை சாலை ஓரத்தில் காய வைத்துக் கொண்டிருந்தார். அப்போது சேடபட்டியில் இருந்து திருமங்கலம் நோக்கி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அழகு மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ஆலம்பட்டியில் இருந்து சேடபட்டி வரை அனைத்து கிராமங்களிலும் வேகத்தடை உள்ளது. ஆனால் வேகத்தடை உள்ள இடங்களில் வெள்ளை நிற வர்ணம் பூசப்படாமல் இருப்பதால் வேகத்தடை இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. எனவே வேகத்தடை இருப்பதற்கான குறியீடுகளை நெடுஞ்சாலைத்துறையினர் வைக்க வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு இதே இடத்தில் லாரி மோதி ஒருவர் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story