தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 12 Aug 2021 2:27 AM IST (Updated: 12 Aug 2021 2:27 AM IST)
t-max-icont-min-icon

மது குடிப்பதை கணவர் நிறுத்தாததால் விரக்தி அடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதூர்,

மதுரை புதூர் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி விஜயபாரதி(வயது 21). மணிகண்டன் கொரோனா காலத்தில் இருந்து சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அடிக்கடி மது குடித்துக்கொண்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. அவரது மனைவியும் மது குடிப்பதை நிறுத்தி விட்டு ஒழுங்காக வேலைக்கு சென்று சம்பாதிக்க வழியை பாருங்க என அறிவுறுத்தி வந்து உள்ளார். இருப்பினும் மணிகண்டன் மனைவி பேச்சை கேட்காமல் தொடர்ந்து மது குடித்து கொண்டு வந்து உள்ளார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த விஜயபாரதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார். இது பற்றி அறிந்த மணிகண்டன், மனைவி உடலை பார்த்து, ஐயோ! நான் மது குடிப்பதை நிறுத்தி இருப்பனே! இப்படி முடிவு எடுத்து விட்டாயே! என கதறி அழுதது பார்ப்போரின் கண்களையும் கலங்க வைத்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் புதூர் போலீசார் விஜயபாரதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story