மதுரை,
மதுரை திலகர் திடல் சட்டம்-ஒழுங்கு போலீசில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி, திலகர் திடல் போக்குவரத்து பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதுபோல் அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், அவனியாபுரம் போக்குவரத்து காவல் பிரிவுக்கும், திருநகர் போலீசில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, கீரைத்துறை சட்டம் ஒழுங்கு பிரிவிற்கும், தெற்கு வாசல் போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ஆண்டவர், உயர் நீதிமன்ற காவல் பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோல் நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 90 பேர் மதுரை மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கும், போக்குவரத்து பிரிவிற்கும், சிறப்பு கட்டுப்பாட்டு பிரிவுக்கு இடமாற்றம் செய்து, மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார்.