திருமங்கலம் கோட்டாட்சியரின் ஜீப் முன்பு மூதாட்டி தர்ணா
திருமங்கலம் கோட்டாட்சியரின் ஜீப் முன்பு மூதாட்டி தர்ணா போராட்டம் நடத்தினார். சொத்துகளை அபகரித்து விட்டு மகன்கள் கைவிட்டதாக அவர் புகார் தெரிவித்தார்.
திருமங்கலம்,
திருமங்கலம் கோட்டாட்சியரின் ஜீப் முன்பு மூதாட்டி தர்ணா போராட்டம் நடத்தினார். சொத்துகளை அபகரித்து விட்டு மகன்கள் கைவிட்டதாக அவர் புகார் தெரிவித்தார்.
சொத்துகள்
கந்தசாமி உயிருடன் இருக்கும் பொழுது வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துக்களை மகன்கள் பெயரில் தானம் செட்டில்மென்ட் பத்திரம் எழுதி கொடுத்து விட்டார். தற்போது கணவர் வசித்த வீட்டில் சரோஜா வசித்து வருகிறார். மகன்கள் எந்தவித உதவியும் ஜீவனாம்சமும் வழங்குவதில்லை. காரியாபட்டியில் குடியிருக்கும் மகள் மகேஸ்வரி அவ்வப்போது உதவி செய்து வந்துள்ளார்.
மூதாட்டி தர்ணா
பின்னர் அவர் நேற்று மாலை தனது மகளுடன் திருமங்கலம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அலுவலகத்தில் திடீரென்று அவர் கோட்டாட்சியரின் ஜீப் முன்பு உட்கார்ந்து திடீர் தர்ணா போராட்டம் நடத்தினார்.
நடவடிக்கை
இதற்கு கோட்டாட்சியர் அனிதா, மகன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அந்த மூதாட்டி அங்கிருந்து கலைந்து சென்றார்.
Related Tags :
Next Story