திருமங்கலம்,
திருமங்கலம் ராஜாஜி முதல் தெருவை சேர்ந்தவர் அழகு பாண்டி. இவருடைய மனைவி அன்னகாமு (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. அழகு பாண்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக அன்னகாமு நேற்று மதியம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமங்கலம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பீமராஜ் (54). குடும்ப தகராறு காரணமாக இவர் பஸ் நிறுத்தம் அருகே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.