41 அடி உயர ஆயிரம் கண்ணுடையாள் அம்மனுக்கு பூச்சொரிதல்
டி.புதுப்பட்டி கிராமத்தில் ஆயிரம் கண்ணுடையாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 41 அடி உயரத்தில் அம்மன் சிலை உள்ளது.
மதுரை,
திருமங்கலம் அருகே டி.புதுப்பட்டி கிராமத்தில் ஆயிரம் கண்ணுடையாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 41 அடி உயரத்தில் அம்மன் சிலை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் 3 நாட்கள் திருவிழா நடைபெறும், ஆயிரம் கண்ணுடையாளுக்கு ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று பூக்குழி, பால்குடம், முளைப்பாரி என வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த நிலையில் கொரோனா பரவலால் வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த ஆண்டு ஆடி கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று பக்தர்கள் இல்லாமல் பூஜைகள் நடத்தப்பட்டது. கோவில் பணியாளர்கள் பால்குடம் எடுத்து, முளைப்பாரி எடுத்து அம்மனுக்கு குடம், குடமாக பால் அபிஷேகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பூச்சொரிதல் நடைபெற்றது. கோவில் நிர்வாகி சக்தி அம்மாள் கூறும்போது, வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சாமி தரிசனம் செய்வார்கள்.ஆனால் தற்போது கொரோனா காலம் என்பதால் அரசு விதிமுறைகளின்படி பக்தர்கள் இல்லாமல் உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், கொரோனாவில் இருந்து மக்களை காத்திடவும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது என தெரிவித்தார்.
Related Tags :
Next Story