பொன்னேரி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு
பொன்னேரி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை-பணம் திருடப்பட்டது.
பொன்னேரி,
பொன்னேரி அருகே பொன் நகர் காவிரி தெருவை சேர்ந்தவர் ரகு (வயது 48). தனியார் நிறுவன ஊழியர். திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர் எண்ணூரில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டுக்கு குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு சென்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.
நகை-பணம் திருட்டு
இதனை தொடர்ந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகள், ¼ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.30 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து பொன்னேரி போலீசில் ரகு புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் வைத்துள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

Related Tags :
Next Story