8-ம் வகுப்பு மாணவி தற்கொலை


8-ம் வகுப்பு மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 16 Aug 2021 2:38 AM IST (Updated: 16 Aug 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

பெற்றோர் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருமங்கலம்,-
பெற்றோர் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை   செய்து கொண்டார்.

8-ம் வகுப்பு மாணவி

மதுைர மாவட்டம் திருமங்கலம் முத்துரங்கன் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் பேன்சி கடை வைத்துள்ளார். இவருடைய மகள் சத்தியபாமா (வயது 13). இவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது கொரோனா காலம் என்பதால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக பாடம் படித்து வந்துள்ளார். மாணவி சரியாக படிக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் மாணவியின் பெற்றோர் ஒழுங்காக பாடம் படிக்குமாறு அவரை கண்டித்துள்ளனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் மனவருத்தம் அடைந்த மாணவி சத்தியபாமா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
 இது குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story