நண்பர்களுடன் மது அருந்தி விட்டு குளித்த போது கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
நண்பர்களுடன் மது அருந்தி விட்டு கொசஸ்தலை ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் வள்ளுவர்புரத்தை சேர்ந்தவர் சின்னராசு (வயது 42). இவர் குப்பை பொறுக்கும் தொழிலாளி ஆவார். நேற்று முன்தினம் சின்னராசு திருவள்ளூர் பத்தியால் பேட்டையை சேர்ந்த தனது நண்பர்களான குமார் (42), பார்த்திபன் (40), தினேஷ் (38) ஆகியோருடன் திருவள்ளூரை அடுத்த மெய்யூர் கொசஸ்தலை ஆற்றுக்கு குளிக்க சென்றார்.
அதற்கு முன்னதாக கரையோரம் அமர்ந்து 4 பேரும் மது அருந்தினார்கள். இந்தநிலையில் ஆற்றில் குளித்தபோது, சின்னராசு ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்றதால், நீரில் மூழ்கி பலியானார். இதை கண்ட உடன் குளித்துக் கொண்டிருந்த நண்பர்கள் கூச்சலிட்டனர்.
நீரில் மூழ்கி பலி
உடனே பொதுமக்கள் பெரியபாளையம் போலீசாருக்கும், திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி ஆற்றில் சேற்றில் சிக்கி இருந்த சின்னராசு உடலை பிணமாக மீட்டனர்.
பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் தரணீஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Tags :
Next Story