கெட்டுப்போன மீன்களை விற்றவர்களுக்கு அபராதம்
கெட்டுப்போன மீன்களை விற்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகரில் நகராட்சி நிர்வாகம் சார்பில் உழவர்சந்தை அருகில் நவீன மீன் மார்க்கெட் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் குறைந்த வாடகைக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. நகராட்சி மற்றும் சுகாதாரதுறை அலுவலர்கள் மேற்பார்வையில் கெட்டுப்போகாத தரம் பரிசோதனை செய்யப்பட்ட மீன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நகரின் பல பகுதிகளில் தெரு மற்றும் சாலையோரங்களில் சுகாதார கேடான முறையில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து வந்த புகாரின்பேரில் நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பொறியாளர் நிலேஷ்வர் தலைமையில் சுகாதார அலுவலர் ஸ்டேன்லி குமார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் நகர் பகுதி முழுவதும் அதிரடி சோதனை நடத்தி தெருக்கள் மற்றும் சாலை ஓரங்களில் மீன் விற்பனை செய்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். இதனை மீறி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
Related Tags :
Next Story