அகில இந்திய காவல்துறை போட்டி: வெற்றி பெற்ற தமிழக போலீஸ் வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசு


அகில இந்திய காவல்துறை போட்டி: வெற்றி பெற்ற தமிழக போலீஸ் வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசு
x
தினத்தந்தி 17 Aug 2021 11:31 AM IST (Updated: 17 Aug 2021 11:31 AM IST)
t-max-icont-min-icon

அகில இந்திய காவல்துறை போட்டி: வெற்றி பெற்ற தமிழக போலீஸ் வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசு கூடுதல் டி.ஜி.பி. வழங்கினார்.

சென்னை,

68-வது அகில இந்திய காவல்துறை போட்டிகள் அரியானா மாநிலம் மதுபானில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற தமிழக காவல்துறை வீரர்-வீராங்கனைகள் விவரமும், அவர்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள ரொக்கப்பரிசு விவரமும் வருமாறு:-

1.தஞ்சை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் அனுராதா, பளுதூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார். இவருக்கு ரூ.5 லட்சம் பரிசு. 2. சென்னை ஆவடி வீராபுரம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீஸ்காரர் சரத்குமார், உடலமைப்பு போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார். அவருக்கு ரூ.3 லட்சம் பரிசு. 3. சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர் வினோத், குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு ரூ.3 லட்சம் பரிசு.

4. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலைய பெண் போலீஸ் ஏட்டு அமுதா, குத்துச் சண்டையில் வெண்கலம் வென்றார். அவருக்கு ரூ.2 லட்சம் பரிசு தொகை. 5. சென்னை சாத்தங்காடு போலீஸ் நிலைய போலீஸ்காரர் அர்ஜூன், பளுதூக்கும் போட்டியில் வெண்கலம் வென்றார். அவருக்கு பரிசு தொகை ரூ.2 லட்சம்.

இவர்களுக்கு சென்னை கீழ்ப்பாக்கம், ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில், கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த்முரளி நேற்று ரொக்கப்பரிசுகளுக்கான காசோலைகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை டி.ஐ.ஜி. எழிலரசன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story