பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்


பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
x
தினத்தந்தி 20 Aug 2021 11:16 PM IST (Updated: 20 Aug 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் பகுதியில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்தியூர், அத்தாணி பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சக்தி கிருஷ்ணன் மற்றும் மருத்துவ குழுவினர் வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல், இருமல் உள்ள 50 பேரை கண்டறிந்தனர். பின்னர் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. இதில் 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி மற்றும் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வீதிகள் தோறும் கிருமிநாசினி அடித்தும், பிளீச்சிங் பவுடர் போட்டும் வருகின்றனர். மேலும் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அத்தாணி, பிரம்மதேசம், எண்ணமங்கலம், வெள்ளாளபாளையம், சந்தியபாளையம், காட்டுப்பாளையம், வெள்ளையம்பாளையம், சின்னத்தம்பிபாளையம், மைக்கேல்பாளையம் உள்பட சுற்றியுள்ள கிராமங்களில் வீடு வீடாகச் சென்று மருத்துவ குழுவினர் தொடர்ந்து சளி, காய்ச்சல் இருமல் உள்ளவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்து வருகின்றனர்.


Next Story