பெண்கள் வரலட்சுமி நோன்பு வழிபாடு


பெண்கள் வரலட்சுமி நோன்பு வழிபாடு
x
தினத்தந்தி 20 Aug 2021 11:54 PM IST (Updated: 20 Aug 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் பெண்கள் வரலட்சுமி நோன்பு வழிபாடு நடத்தினார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை அன்று 16 வகை செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள்வேண்டி பெண்கள் வரலட்சுமி நோன்பு இருப்பது வழக்கம். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) பவுர்ணமி என்பதால் நேற்று ஈரோட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் வரலட்சுமி நோன்பு வழிபாடு நடைபெற்றது.
ஈரோடு மேட்டுக்கடை நத்தக்காட்டுப்பாளையம் சுந்தர பவனத்தில் பெண்கள் வரலட்சுமி நோன்பையொட்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். அப்போது அவர்கள் மாங்கல்ய பாக்கியம் வேண்டியும், குடும்பம் நலம் பெறவும் அம்மனுக்கு முல்லை, மல்லிகை, ஜாதிமல்லி, தாமரை உள்ளிட்ட பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்தும், பூஜை நடத்தியும் வழிபட்டனர். பின்னர் பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு வளையல், சீப்பு, தேங்காய், பழம், குங்குமம், பூ, மஞ்சள் கயிறு போன்றவை வழங்கப்பட்டது. முன்னதாக கணவன், மனைவிக்கு மஞ்சள் கயிறு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

Next Story