பவானிசாகர் அணை நீர்மட்டம் 101 அடியாக உயர்வு
பவானிசாகர் அணை நீர்மட்டம் 101 அடியாக உயர்ந்தது.
பவானிசாகர் அணை நீர்மட்டம் 101 அடியாக உயர்ந்தது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது.
நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.
நீர்வரத்து குறைவு
இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர்வரத்து குறைந்தது. நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 822 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 101.05 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும், காலிங்கராயன் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.14 அடியாக இருந்த நிலையில் அணைக்கு வினாடிக்கு 632 கன அடி தண்ணீர் மட்டும் வந்தது. பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும், காலிங்கராயன் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும் என மொத்தம் பவானி ஆற்றில் வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
Related Tags :
Next Story