லாரி கவிழ்ந்து விபத்து


லாரி கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 21 Aug 2021 8:45 PM IST (Updated: 21 Aug 2021 8:45 PM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிர் தப்பினார்

தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை சத்தியமங்கலத்தை சேர்ந்த தங்கராஜ் (வயது 50) என்பவர் ஓட்டினார்.
கும்டாபுரம் அருகே வனப்பகுதி சாலையில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டோரத்தில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த கரும்புகள் சிதறின. டிரைவர் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினார். இதைத்தொடர்ந்து மாற்று லாரி வரவழைக்கப்பட்டு் கரும்பு அதில் ஏற்றப்பட்டது. பின்னர் கவிழ்ந்து கிடந்த லாரி கிரேன் மூலம் மீட்கப்பட்டது. ரோட்டோரத்தில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த விபத்து குறித்து தாளவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
---

Related Tags :
Next Story