தாளவாடி மக்கள் தலமலை வனச்சாலையில் செல்ல அனுமதி


தாளவாடி மக்கள் தலமலை வனச்சாலையில் செல்ல அனுமதி
x
தினத்தந்தி 22 Aug 2021 1:55 AM IST (Updated: 22 Aug 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி மக்கள் தலமலை வனச்சாலையில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

தாளவாடி மலைப்பகுதி கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் சத்தியமங்கலம், கோவை, ஈரோடு செல்ல வேண்டுமானால் கர்நாடக மாநிலத்துக்குள் 15 கிலோ மீட்டர் தூரம் புளிஞ்சூர் வழியாக சென்று தமிழக பகுதியான ஆசனூர் பகுதியை அடையமுடியும். தற்போது கொரோனா பரவல் காரணமாக கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதனால் தாளவாடி பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். மாற்று பாதையான தலமலை சுற்று பாதையில் செல்லவும் வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் அத்தியாவசிய தேவை, அவசர தேவைக்கும் கூட தாளவாடி பகுதி மக்கள் சத்தியமங்கலம் செல்லமுடியாமல் தவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து தலமலை வனச்சாலை வழியாக தாளவாடி பகுதி மக்களை சத்தியமங்கலம் செல்ல அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துவந்தனர். அதனை ஏற்று தாளவாடி பகுதி மக்கள் கர்நாடகாவில் ஊரடங்கு முடியும் வரை தலமலை வனச்சாலை வழியாக செல்லவும், அதே போல் கட்டணம் இல்லாமல் செல்லவும் அனுமதி அளித்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார்.

Next Story