ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 146 பேருக்கு கொரோனா; தினமும் 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 146 பேருக்கு கொரோனா; தினமும் 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை
x
தினத்தந்தி 23 Aug 2021 1:53 AM IST (Updated: 23 Aug 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 146 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

ஈரோடு
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாகவே காணப்படுகிறது. ஈரோடு மாவட்டத்திலும் தினமும் சுமார் 150 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
எனவே தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக கொரோனா பரிசோதனை அதிகபடுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்க முடிகிறது. தமிழகத்திலேயே சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டத்தில் அதிக பரிசோதனை செய்யப்படுகிறது. தினமும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 10 ஆயிரத்து 105 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 152 பேருக்கு தொற்று உறுதியானது. இந்தநிலையில் நேற்று புதிதாக 146 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 97 ஆயிரத்து 304 ஆக உயர்ந்தது. இதில் 94 ஆயிரத்து 934 பேர் குணமடைந்து உள்ளார்கள். நேற்று மட்டும் 186 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். தற்போது 1,728 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுவரை மொத்தம் 642 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Next Story