திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது; 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது; 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 23 Aug 2021 2:04 AM IST (Updated: 23 Aug 2021 2:04 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப்பாதை 
சத்தியமங்கலத்தை அடுத்து 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதையானது திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இதன்காரணமாக இந்த மலைப்பாதையில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். திம்பம் மலைப்பாதையில் அதிக அளவுக்கு பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து     பாதிப்பு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. 
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்து தென்காசிக்கு பீடி தூள் பாரம் ஏற்றிய லாரி ஒன்று திம்பம் மலைப்பாதையில் நேற்று சென்று கொண்டிருந்தது.       காலை 7 மணி அளவில் மலைப்பாதையின் 9-வது கொண்டை ஊசி வளைவு அருகே திரும்பியபோது லாரி திடீரென பழுதாகி நின்றது. 
போக்குவரத்து பாதிப்பு
இதனால் ரோட்டின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதைத்தொடர்ந்து பண்ணாரியில் இருந்து மெக்கானிக் அழைத்து வரப்பட்டு, லாரியில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணி நடைபெற்றது. பகல் 11 மணி அளவில் லாரியில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து வாகன போக்குவரத்து தொடங்கியது. 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். 

Next Story