பவுர்ணமியையொட்டி அந்தியூர், கோபி பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு


பவுர்ணமியையொட்டி அந்தியூர், கோபி பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

பவுர்ணமியையொட்டி அந்தியூர், கோபி பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஈரோடு
பவுர்ணமியையொட்டி அந்தியூர், கோபி பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
அந்தியூர்
அந்தியூர் பஸ் நிலையம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. பவுர்ணமியையொட்டி இந்த கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு மஞ்சள், பால், இளநீர் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம்     செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு பத்ரகாளியம்மன் அருள்பாலித்தார். இதேபோல் அந்தியூர் தேர் வீதியில் உள்ள பேட்டை பெருமாள் கோவிலிலும் பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. 
இதில் அந்தியூர், தவுட்டுபாளையம், ஆப்பக்கூடல், ஒலகடம், வெள்ளித்திருப்பூர், சந்தியபாளையம், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், அத்தாணி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
கோபி
கோபி டவுன் வடக்கு வீதியில் பெரம்பலூர் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. பவுர்ணமியையொட்டி நேற்று இந்த கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 
இதையடுத்து தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். 

Next Story