காரை வாய்க்கால் சுயம்பு நாகர் கோவிலில் ஆவணி அவிட்டம் விழா; பக்தர்கள் பூணூல் மாற்றி கொண்டனர்


காரை வாய்க்கால் சுயம்பு நாகர் கோவிலில்  ஆவணி அவிட்டம் விழா; பக்தர்கள் பூணூல் மாற்றி கொண்டனர்
x
தினத்தந்தி 23 Aug 2021 2:31 AM IST (Updated: 23 Aug 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு காரை வாய்க்கால் சுயம்பு நாகர் கோவிலில் ஆவணி அவிட்டம் விழா கொண்டாடப்பட்டது. இதில் பக்தர்கள் பூணூல் மாற்றி கொண்டார்கள்.

ஈரோடு
ஈரோடு காரை வாய்க்கால் சுயம்பு நாகர் கோவிலில் ஆவணி அவிட்டம் விழா கொண்டாடப்பட்டது. இதில் பக்தர்கள் பூணூல் மாற்றி கொண்டார்கள்.
ஆவணி அவிட்டம்
ஈரோடு காரை வாய்க்காலில் பிரசித்தி பெற்ற சுயம்பு நாகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நாளில் பக்தர்கள் புதிய பூணூல் அணிந்து கொள்வது வழக்கம். இந்தநிலையில் ஆவணி அவிட்டம் விழா காரை வாய்க்கால் சுயம்பு நாகர் கோவிலில் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பூணூல் மாற்றி கொண்டனர். இதையொட்டி நேற்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
சவுராஷ்டிரா சபை
இதேபோல் ஈரோடு சவுராஷ்டிரா சபை சார்பில் பூணூல் மாற்றி கொள்ளும் விழா சுயம்பு நாகர் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் மண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு சபை தலைவர் கே.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆர்.என்.கே.குருபரன், பொருளாளர் சீனிவாசன், உதவி தலைவர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சேலம் ஸ்ரீநிவாச அய்யங்கார் கலந்துகொண்டு வழிபாடு செய்து விழாவை நடத்தி வைத்தார். தொடர்ந்து பக்தர்கள் பூணூல் மாற்றி கொண்டார்கள். இதைத்தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

Next Story