டி.என்.பாளையம் அருகே ‘ஆசிட்’ ஊற்றி பனை மரங்களை அழிக்கும் மர்மநபர்கள்- பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

டி.என்.பாளையம் அருகே ‘ஆசிட்’ ஊற்றி பனை மரங்களை அழிக்கும் மர்மநபர்கள்- பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
x
தினத்தந்தி 24 Aug 2021 3:04 AM IST (Updated: 24 Aug 2021 3:04 AM IST)
t-max-icont-min-icon

டி.என்.பாளையம் அருகே ஆசிட் ஊற்றி பனை மரங்கள் அழிப்பதை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருகே ஆசிட் ஊற்றி பனை மரங்கள் அழிப்பதை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
ஆசிட் ஊற்றி அழிப்பு
டி.என்.பாளையம் அருகே உள்ள அரக்கன்கோட்டை கிளை வாய்க்கால் செல்லும் வழியில் இருபுறமும் பல்வேறு வகையான மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. அதில் அதிகளவில் காணப்படுவது பனை மரமே. பனை மரத்தில் இருந்து நுங்கு, பனம்பழம், பனை ஓலை, பதநீர் உள்ளிட்டவை கிடைக்கிறது. 
கடந்த சில நாட்களுக்கு முன்பு அரக்கன்கோட்டை வாய்க்கால் கரையோரம் உள்ள பனை மரங்களின் குருத்துகளை வளர விடாமல், மர்ம நபர்கள் ஆசிட் ஊற்றி அழித்துள்ளனர். இது 5 முதல் 6 ஆண்டுகள் வரையுள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
தமிழக அரசு பனை மரங்களை வெட்ட அனுமதி பெற வேண்டும் என்று தற்போது உத்தரவிட்டுள்ளது. மேலும் பனை மரங்களை நட வேண்டும் என்று விழிப்புணர்வும் செய்து வருகிறது. இந்த வேளையில் இது போன்ற செயல் நடந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவி கோட்ட பொறியாளரிடம் ஒரு மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள், ‘பனைமரங்களை ஆசிட் ஊற்றி அழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கொடுத்துள்ளனர்
பனை மரங்களை அழிவதை தடுக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Next Story