காலிங்கராயன் பாசன பகுதியில் நெல் சாகுபடியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்


காலிங்கராயன் பாசன பகுதியில் நெல் சாகுபடியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்
x
தினத்தந்தி 25 Aug 2021 3:13 AM IST (Updated: 25 Aug 2021 3:13 AM IST)
t-max-icont-min-icon

காலிங்கராயன் பாசன பகுதியில் நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

ஈரோடு
காலிங்கராயன் பாசன பகுதியில் நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
காலிங்கராயன் வாய்க்கால்
காலிங்கராயன் வாய்க்கால் மூலமாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த வாய்க்காலில் ஆண்டுதோறும் தொடர்ந்து 10 மாதங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் மஞ்சள் பிரதான பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், வாழை, கரும்பு, நெல் ஆகிய பயிர்களையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு திறக்கப்படும் தண்ணீர் பவானியில் உள்ள காலிங்கராயன் அணைக்கு வந்தடைகிறது. அங்கிருந்து காலிங்கராயன் வாய்க்காலில் திறந்து விடப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் வேளாண்மையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
நாற்று நடவு
இந்தநிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளில் நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதையொட்டி சாகுபடிக்காக நிலத்தை அவர்கள் தயார் செய்து வருகின்றனர். நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி உழவு செய்யப்பட்டு வருகிறது. மேலும், வயல்களில் விதைகள் போட்டு நாற்றங்கால் வளர்க்கும் பணி நடந்தது. தற்போது நாற்றங்கால் நடவுக்கு ஏற்ப நன்கு வளர்ச்சி அடைந்து உள்ளது. இதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் நாற்றை பிடுங்கி நடவுக்கு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டார்கள்.

Next Story