ஈரோடு மாவட்டத்தில் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவிப்பு


ஈரோடு மாவட்டத்தில் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Aug 2021 9:45 PM GMT (Updated: 24 Aug 2021 9:45 PM GMT)

திருந்திய பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவித்து உள்ளார்.

ஈரோடு
திருந்திய பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவித்து உள்ளார்.திருந்திய பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவித்து உள்ளார்.
பயிர் காப்பீடு
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் அக்ரிக்கல்சுரல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி என்ற நிறுவனம் மூலம் பயிர் காப்பீடு செய்யப்பட உள்ளது.
காரீப்- 2021 (சம்பா பருவம் அல்லது ஆடிப்பட்டம், மானாவாரி சாகுபடி) பருவத்தில் மக்காச்சோளம், துவரை, நிலக்கடலை, ராகி, எள் ஆகியவை பிர்கா (உள்வட்டம்) அளவில் அறிவிக்கை செய்யப்பட்டு உள்ளன. தோட்டக்கலை பொருட்களான வாழை, மரவள்ளி, வெங்காயம், மஞ்சள், வெண்டைக்காய், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு ஆகிய பயிர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
பதிவு செய்யலாம்
எனவே இந்த பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் தாங்கள் பயிர்க்கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ தங்கள் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீடு செய்யலாம்.
பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான (ஜூலை முதல் ஜூன் வரை) அடங்கல், விதைப்பு சான்றை கிராம நிர்வாக அதிகாரிகளிடம் பெற்று வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் சிட்டா நகல் ஆகியவற்றை கொண்டு பொதுச்சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பதிவு செய்யலாம்.
கட்டண விவரம்
பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு செலுத்த வேண்டிய காப்பீட்டு கட்டணம் விவரம் வருமாறு:-
மக்காச்சோளம்- ரூ.616
துவரை- ரூ.342
நிலக்கடலை - ரூ.621
ராகி - ரூ.275.50
எள் - ரூ.275
வாழை- ரூ.4,272.50
மரவள்ளி- ரூ.1,849
வெங்காயம் - ரூ.2,104
மஞ்சள் - ரூ.4,375
வெண்டைக்காய்- ரூ.925
முட்டைக்கோஸ் - ரூ.1,100
உருளைக்கிழங்கு - ரூ.2,342
என்ற விகிதத்தில் காப்பீட்டு கட்டணம் செலுத்த வேண்டும்.
கடைசிநாள்
மக்காச்சோளம், துவரை, நிலக்கடலை, ராகி, எள், வெங்காயம், உருளைக்கிழங்கு, வெண்டைக்காய், முட்டைக்கோஸ் ஆகிய பயிர்களுக்கு வருகிற 31-ந் தேதியும், வாழை, மஞ்சள், மரவள்ளி ஆகிய பயிர்களுக்கு செப்டம்பர் 15-ந் தேதியும் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாட்களாகும்.
பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டத்தில் குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் முன்கூட்டியே பதிவு செய்து பயன் அடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறி உள்ளார்.

Next Story