ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நடமாடிய சிறுத்தை; வாகன ஓட்டிகள் பீதி


ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நடமாடிய சிறுத்தை; வாகன ஓட்டிகள் பீதி
x
தினத்தந்தி 26 Aug 2021 2:29 AM IST (Updated: 26 Aug 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் சிறுத்தை நடமாடியதால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளார்கள்.

தாளவாடி
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் சிறுத்தை நடமாடியதால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளார்கள். 
சிறுத்தை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட  வன விலங்குகள் வசித்து வருகின்றன. சத்தியமங்கலம் வனப்பகுதி வழியாக தமிழகம்-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தி-மைசூரு தேசிய நெடுஞ்சாலையும் செல்கிறது.
யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் இந்த தேசிய நெடுஞ்சாலையை அடிக்கடி கடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை சத்தியமங்கலம் அருகே உள்ள ஆசனூரில் சத்தி-மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரம் சர்வ சாதாரணமாக ஒரு சிறுத்தை நடந்து சென்றது. 
படம் பிடித்தார்கள்
அப்போது அந்த வழியாக காரில் சென்றவர்கள் சிறுத்தை நடமாட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். மேலும் தங்களுடைய செல்போனில் சிறுத்தை நடமாட்டத்தை வீடியோ எடுத்தார்கள்.
சிறிது நேரம் ரோட்டோர புல்வெளியில் நடந்த சிறுத்தை பின்னர் அடர்ந்த காட்டுக்குள் சென்றுவிட்டது. இதுபற்றிய தகவல் பரவியதும் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிகவும் பீதியடைந்தார்கள். 
இதுகுறித்து ஆசனூர் வனத்துறையினர் கூறும்போது, ‘யானை, சிறுத்தை, புலி போன்ற வன விலங்குகள் ரோட்டோரம் நடமாடினால் அருகே ெசன்று செல்போனில் படம் பிடிக்காதீர்கள். அது ஆபத்தை விளைவித்துவிடும’் என்று எச்சரித்துள்ளார்கள். 

Next Story