ஈரோடு மாவட்டத்தில் 205 இடங்களில் 32,360 பேருக்கு கொரோனா தடுப்பூசி


ஈரோடு மாவட்டத்தில் 205 இடங்களில் 32,360 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 26 Aug 2021 2:35 AM IST (Updated: 26 Aug 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 205 இடங்களில் 32 ஆயிரத்து 360 பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 205 இடங்களில் 32 ஆயிரத்து 360 பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சுகாதாரத்துறை சார்பில் முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அதன்படி மாவட்டத்தில் தற்போது வரை 9 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், தாளவாடி, நம்பியூர் உள்ளிட்ட 182 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் முகம் நடந்தது.
கோவிஷீல்டு-கோவேக்சின்
இதேபோல் ஈரோடு மாநகராட்சி பகுதியில் 23 இடங்களில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி போடும் முகம் நேற்று நடைபெற்றது. மக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் அந்தந்த தடுப்பூசி போடும் முகாமிற்கு சென்று  நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஈரோடு வைராபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டபடி பொதுமக்கள் நின்றனர்.  
மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 20 ஆயிரத்தை 70 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 12 ஆயிரத்து 290 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் என மொத்தம் நேற்று மட்டும் 32 ஆயிரத்து 360 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Next Story